சொக்கிகுளம் அருள்மிகு சோமலிங்கேஸ்வரர் திருக்கோயில் – Somalingeswarar Temple

அருள்மிகு சோமலிங்கேஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

சோமலிங்கேஸ்வரர்


ஊர்:

சொக்கிகுளம்


மாவட்டம்:

மதுரை


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பிரதோஷ நாட்களில் சிவனுக்கு அன்னாபிஷேகம், மாவுகாப்பு அலங்காரங்கள் செய்து சிறப்பு பஜனைகள் நடத்தப்படுகிறது. சிவனுக்கு செய்யும் அத்துணை பூஜைகளும் பெருமாளுக்கும் செய்யப்படுவது, இந்த கோயிலில் மட்டும்தான். பிரதான தெய்வம் சிவனாகயிருந்தாலும், சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஹரியும், சிவனும் ஒன்று என்ற சொல்லிற்கேற்ப, அமைந்துள்ளன.


தல சிறப்பு:

சிவன் ஆவுடை வடக்கு நோக்கியிருப்பது சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு சோமலிங்கேஸ்வரர் திருக்கோயில் சொக்கிகுளம், மதுரை.


போன்:

+91 98430 52246


பொது தகவல்:

இங்கு பெருமாளுக்கும் சிவனுக்கும் சன்னதி அமைந்துள்ளது.


பிரார்த்தனை


நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


தலபெருமை:

சைவ கடவுளான சிவனும், வைணவ கடவுளான விஷ்ணுவும் ஒன்று சேர்ந்து சிவ பெருமாளாக காட்சியளிக்கின்றனர்.


பிரதோஷ நாட்களில் சிவனுக்கும், புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. இந்த பகுதியை கடந்து செல்பவர்களுக்கு, சிவ பெருமாள் சுவாமிகள் எளிதில் காட்சி தரும் வகையில் கோயில் அமைந்துள்ளது. மேற்கு திசை பார்த்த இந்த கோயிலிலுள்ள, சிவன் ஆவுடை வடக்கு நோக்கியிருப்பது சிறப்பு. திருப்பதி பெருமாளின் ÷தோற்றத்தை போல அமைந்திருக்கும், மூலவரான பெருமாளை தூரத்தில் வரும்போதே, தரிசிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.


தல வரலாறு:

இங்குள்ள உற்சவரை திருப்பதியிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

சிவன் ஆவுடை வடக்கு நோக்கியிருப்பது சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.