சோழவந்தான் மூலநாதர் சுவாமி கோயில்

மூலவர்:


மூலநாதர் சுவாமி


அம்மன்/தாயார்:

அகிலாண்டேஸ்வரி


தீர்த்தம்:

திருக்குளம்


ஊர்:

சோழவந்தான்


மாவட்டம்:

மதுரை


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், விசாகம், சித்திரை பிறப்பு, நவராத்திரி உற்சவம், ஐப்பசி உற்சவம், சங்காபிஷேகம், அஷ்டமிசப்பரம், திருவாதிரை உற்சவம் நடக்கின்றன.


தல சிறப்பு:

பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.


திறக்கும் நேரம்:

காலை 6.30 முதல் பகல் 12 மணி, மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு மூலநாதர் சுவாமி திருக்கோயில் சோழவந்தான், மதுரை.


போன்:

+91 99432 61487


பொது தகவல்:

ராஜகோபுரத்தை அடுத்து சுவாமி கோயிலில் நூற்றுக்கால் மண்டம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் உள்ளன. ஆடி வீதியில் சரஸ்வதி, மகாலட்சுமி சன்னதி, நவக்கிரகங்கள், மேற்குதிசையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசபெருமாள், வடக்கில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி, துர்க்காதேவி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சிஅம்மன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரி அம்மன் என ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.


பிரார்த்தனை


திருமணம், குழந்தைவரம், வியாபார விருத்தி, உடல் ஆரோக்கியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், மூன்று திங்கட்கிழமைகளில் நெய்விளக்கேற்றி, பொங்கல் படைத்து பூஜை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


தலபெருமை:

அம்மன், சுவாமி சன்னதி முன் நந்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். பூர்ணபுஷ்பகரணியான புனித தெப்பக்குளம் அம்மன் சன்னதி முன் உள்ளது. அம்மன் கோயிலில் அனைத்து சித்தர்களின் பலவண்ண ஓவியங்கள் காட்சியளிக்கின்றன. தோஷ நட்சத்திரம் கொண்ட பெண்கள் மஞ்சள் அரளிப்பூ, நாகலிங்க இலைபூவால் பூஜை செய்தால் தோஷம் நிவர்த்தியாகி, மங்கள காரியங்கள் நடக்கும், என்பது ஐதீகம். தெப்பத்தில் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் குளித்து, தீர்த்தத்தை அருந்தினால் தீராத தோல், உடல்நோய் அகலும். அன்னதானம் செய்தால் குடும்பநலம், சுபகாரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.


தல வரலாறு:

12ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.

About the author

Leave a Reply

Your email address will not be published.