சின்னையா சத்திரம் காசி விஸ்வநாதர் கோயில்

மூலவர்:


காசி விஸ்வநாதர்


அம்மன்/தாயார்:

விசாலாட்சி


தல விருட்சம்:

மகிழ மரம்


ஊர்:

சின்னையா சத்திரம்


மாவட்டம்:

புதுக்கோட்டை


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

தமிழ்ப்புத்தாண்டன்று வருஷாபிஷேகம், திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.


தல சிறப்பு:

காஞ்சிப்பெரியவரால் நடப்பட்ட மகிழமரம் தலவிருட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


திறக்கும் நேரம்:

காலை:

7.30 மணி முதல் 10 மணி வரை மாலை: 4.30 மணி முதல் 7 மணி வரை.

முகவரி:

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் சின்னையா சத்திரம், புதுக்கோட்டை


போன்:

+91 98430 40464


பொது தகவல்:

மூலவர் விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும், விசாலாட்சி தெற்கு நோக்கியும் உள்ளனர். அம்மன் சன்னதியிலுள்ள பிரதான வாசல் ஆண்டு முழுவதும் திறக்கப்படுகிறது. சுவாமி சன்னதியிலுள்ள வாசல் திருக்கார்த்திகையன்று மட்டும் திறக்கப்பட்டு, சொக்கப்பான் கொளுத்தப்படும். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், துர்க்கை, நவக்கிரகம், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. கோட்டைச் சுவருக்கு வெளியே ‘வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயர்’ சன்னதி உள்ளது.


விரைவில் கோயில் புதுப்பிக்கப்பட்டு ராஜகோபுரத் திருப்பணி தொடங்க உள்ளது.


பிரார்த்தனை


குழந்தை பாக்கியம், திருமண தடை உள்பட சகல விதமான பிராத்தனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


நேர்த்திக்கடன்:

விஸ்வநாதரின் அருளால் குழந்தைப்பேறு அடைந்தவர்கள் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர்.


தலபெருமை:

கோயிலைச் சுற்றியுள்ள 18 பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் இல்ல சுபநிகழ்ச்சிகளான நிச்சயதார்த்தம், திருமணம், பெயர்சூட்டுதல் போன்ற சுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்துகின்றனர்.


காசி தரிசனம்:

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் காசியாத்திரை சென்று, மூன்று நாட்கள் கங்கையில் நீராடி விஸ்வநாதர், விசாலாட்சியை தரிசித்தால் தோஷம் நீங்கும். அதற்குரிய வசதி, வாய்ப்பு இல்லாதவர்கள் இக்கோயிலை தரிசித்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.


தல வரலாறு:

சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடி விநாயகர் கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்தார் காஞ்சிப்பெரியவர். வரும் வழியில் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சின்னையா சத்திரத்தில் பக்தர் ஒருவரது வீட்டில் தங்கினார். பெரியவரிடம் அந்த பக்தர், ‘தனக்கு நீண்டகாலமாக குழந்தைப்பேறு வாய்க்கவில்லை’ என வருந்தினார். காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு கோயில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என அருள்புரிந்தார் பெரியவர். அதனடிப்படையில் இங்கு விஸ்வநாதர் கோயில் கட்டப்பட்டது. காஞ்சிப்பெரியவர் தங்கிய வீடு கோயிலுக்கு அருகில் உள்ளது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

கோயிலைச் சுற்றியுள்ள 18 பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் இல்ல சுபநிகழ்ச்சிகளான நிச்சயதார்த்தம், திருமணம், பெயர்சூட்டுதல் போன்ற சுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்துகின்றனர்.

About the author

Leave a Reply

Your email address will not be published.