வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில்

மூலவர்:


வாலீஸ்வரர்


தீர்த்தம்:

சரவண தீர்த்தம்


ஊர்:

வாலிகண்டபுரம்


மாவட்டம்:

பெரம்பலூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

அஷ்டமி பூஜை இங்கு வெகு சிறப்பு


தல சிறப்பு:

வாலி பூஜித்த வாலீஸ்வரர் இங்கு சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் வாலிகண்டபுரம் பெரம்பலூர்.


பொது தகவல்:

ராஜகோபுரத்தின் முன்பாக இடதுபுறம் நடராஜர் மண்டபம். ஆடல்வல்லான் நடராஜப் பெருமானின் திருவுருவம். மண்டபத் தூண்களில் மயக்கும் சிற்பங்கள் கி.பி 1514 ல் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம். ராஜகோபுரத்துக்கு நேரேதிராகவும், நடராஜர் மண்டபத்துக்கு தென் எதிராகவும் சிறிய கல் மண்டபத்தில் பாலகணபதி. ராஜகோபுரத்திருவாயில் தூண்களில் இருபுறமும் எதிர் எதிராக எழிலாக வடிவுருவம் தாங்கி நிற்கின்றனர் இரண்டு எழில் அரசிகள். கோபுரத்தின் உட்புறம் வலது பக்கமாக ஈசான்ய மூலையில் சரவண தீர்த்தம் எனப்படும் திருக்குளம். முன்னொரு காலத்தில் ஆண்டுக்கொருமுறை இதில் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. திருக்குளத்தூணில் வாலி சிவபூஜை செய்வது போன்ற சிற்பம் இங்கு மட்டுமே என்று எண்ணிட வேண்டாம். திருக்கோயிலில் ஆங்காங்கே மண்டபத் தூண்களில் வாலி சார்ந்த சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் பற்பல தூண்களில் வாலி மயமாகவே காட்சியளிக்கின்றன வெவ்வேறு வகை சிற்பங்கள். மண்டபத்தில் திருநந்திதேவர் சதா சர்வகாலமும் வாலீஸ்வரனைக் கண்டுருகும் காரணத்தால் அமைதி தவழ வீற்றிருக்கிறார். இத்திருக்கோயிலில் மூன்று இடங்களில் முறையே மூலஸ்தானத்தின் எதிரே அடுத்தடுத்து பின்தொடரும் வரிசையாக பாலநந்தி, வாலிபநந்தி, யவ்வன நந்தி என அமையப்பெற்றுள்ளனர். மகா மண்டபத்தில் உள்ளே மேற்கு நோக்கி பைரவர் இடுப்பிலே நாகப்பாம்பை அரைஞான் கயிறாகவும், மண்டையோடுகளை பூணுலாகவும் அணிந்த வண்ணம் நின்று கொண்டிருக்கிறார். அர்த்தமண்டப வாசலையொட்டி வலதுபுறம் கல்யாண விநாயகர் வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளே சென்றால் மூலவர் சன்னிதி எதிரே பால நந்தி.


பிரார்த்தனை


எம பயம் நீக்கவும், நீண்ட ஆயுள் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


தலபெருமை:

தூரத்திலிருந்து பார்க்கும்போதே அழகிய ஏழு நிலை ராஜகோபுரம். அப்படியே நம் மனசுக்குள் எழுந்து நிற்கிறது. திருவுருவச் சிலைகள் ஏதுமற்ற வேலைப்பாடுகளுடனான பீடங்கள் பொருந்திய ராஜகோபுரம் இது. சகஸ்ர கோபுரம் எனக் குறிப்பிடப்படுகிறது. கோபுர உச்சியில் ஒன்பது கலசங்கள் மிளிர்கின்றன. ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில். வாலி பூஜை செய்த இறைவனுக்கு வாலீஸ்வரர் என்றும், ஊருக்கு வாலி கொண்டபுரம் என்றும் பெயர். அதுவே மருவி தற்போது வாலிகண்டபுரம் ஆனாலும் முதலாம் ராஜராஜ சோழன் தனது வெற்றிப் பெயர்களுள் ஒன்றான கேரளாந்தகனை நினைவுபடுத்தும் விதமாக இந்த ஊருக்கு கி.பி 1013 ல் கேரளாந்தகபுரம் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்ததாகக் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன.


மகா மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கி துர்க்கை அம்சத்துடன் அன்னை வாலாம்பிகை. நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். கருவறைக்குப் பின்புறமாக மகாமண்டபச் சுற்றில் கை பின்னமான தண்டாயுதபாணியும், பின்னமான தட்சிணாமூர்த்தியும் பதிக்கப்பட்டுள்ளனர். காது மடல் நீண்டு தொங்கும் ஆதி தண்டாயுதபாணி அடுத்து வடமேற்கு மூலையில் ஆதிகாலத்தில் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கொற்றவை.


மகா மண்டப பிராகாரச் சுற்றில் தென் திசையில் மிகப் பிரம்மாண்டமாக சுமார் ஏழரை அடி உயரத்தில் கையில் வேலுடன் கருணையே வடிவமாகக் காட்சியளிக்கிறார் தண்டாயுதபாணி, அருணகிரிநாதருக்கு முக்திக்குரிய தலம் எதுவென்று இங்குதான் அருளப்பட்டது. தண்டாயுதபாணியின் திருமுகம் மேற்குப்புறமாக சற்றே சாய்ந்து நளினமும் சாந்தமும் அருளும் நிறைந்து இங்கு காணப்படுவது மிக மிகச் சிறப்பு. வடக்கு திசைநோக்கிய இந்த தண்டாயுதபாணி, எம பயம் நீக்கி நீண்ட ஆயுளைத் தர வல்லவர். பங்குனி உத்திரத் திருவிழா இங்கு மிக முக்கியத் திருவிழா!


தல வரலாறு:

தென்புறத்தில் 1008 பாணம் உள்ளடக்கிய ஒரே லிங்கம். கருவறையில் வாலீஸ்வரர் சுயம்பு மூர்த்தியானதால் சற்றே ஒரு பக்கமாக சாய்ந்து காட்சியருளிக் கொண்டிருக்கிறார். இங்கு வந்திருந்து பூஜை செய்வித்துதான். எதிராளியின் பலத்திலிருந்து சரி பாதியினைத் தன் பலத்துடன் சேர்த்து பெற்றுக் கொண்டு எவரையும் வீழ்த்தும் சக்தியினை வாலி பெற்றதாகப் புராண வரலாறு.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

வாலி பூஜித்த வாலீஸ்வரர் இங்கு சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published.