திருக்கோவர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில் – Pragambal Temple

அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில்


மூலவர்:

கோகணேஸ்வரர் , மகிளவணேஸ்வரர்


அம்மன்/தாயார்:

பிரகதாம்பாள், மங்களாம்பிகை


தல விருட்சம்:

மகிள மரம்


தீர்த்தம்:

மங்கள தீர்த்தம்


புராண பெயர்:

புதுக்கோட்டை


ஊர்:

திருக்கோவர்ணம்


மாவட்டம்:

புதுக்கோட்டை


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

சித்திரை கொடி ஏற்றம் – 10 நாள் திருவிழா ஆடிப்பூசம் -11 நாள் திருவிழா புரட்டாசி – நவராத்திரி திருவிழா (அம்பு போடும் திருவிழா)- 10 நாள் திருவிழா. தைப்பூசம் -10 நாள் திருவிழா மாசி திருவிழா – 10 நாள் திருவிழா விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உற்சவம், கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை தீப விழா, மார்கழி திருவாதிரை ,ஆருத்ரா தரிசனம், தை வெள்ளி , மாசி மகம் , பங்குனி உத்ரம் ஆகிய தினங்களில் கோயிலில் அபிசேக ஆராதனைகள் நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தவிர அமாவாசை, பவுர்ணமி, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்கள் பெருமளவில் கூடுவது வழக்கம்.


தல சிறப்பு:

இது ஒரு குடவரைக் கோயில். இங்கு அரைக்காசு அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். ஏதேனும் பொருள் தொலைந்தால் “அரைக்காசு அம்மனுக்கு காணிக்கை’ எனக்கூறி சிறிதுவெல்லத்தை எடுத்துவைத்துவிட்டுதேடினால் உடனே கிடைத்துவிடும்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோவர்ணம் – 622 002, புதுக்கோட்டை மாவட்டம்


போன்:

+91-4322-221084, 9486185259


பொது தகவல்:

இத்தலத்திற்கு அருகில் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சத்திர மூர்த்தி பெருமாள் திருக்கோயில், ஆத்மநாத சுவாமி திருக்கோயில், சிகாநாதர் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளது.


பிரார்த்தனை


இத்தலத்து ஈசனை வணங்கினால் சாப விமோசனம் கிடைக்கும். மேலும் , ஏதேனும் பொருள் தொலைந்தால் “அரைக்காசு அம்மனுக்கு காணிக்கை’ எனக்கூறி சிறிதுவெல்லத்தை எடுத்துவைத்துவிட்டுதேடினால் உடனே கிடைத்துவிடும்.


இவை தவிர திருமண பாக்கியம் வேண்டுவோர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வணங்கினால் நிச்சயம் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன்:

வெல்லம் வைத்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தல் சிறப்பு. தவிர மஞ்சள் பொடி, திரவிய பொடி ஆகியவை படைத்து வழிபடலாம். இறைவனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். இவை தவிர பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.


தலபெருமை:

சிவபெருமான் காமதேனுவுக்கு மோட்சம் தரக் காரணமாக இருந்த சிவ தலம். கிழக்கு பார்த்திருக்கும் கோகணேஸ்வரர் சன்னதி. குடவரைக் கோயில். பிரகதாம்பாள் புதுக்கோட்டை மன்னரோடு நேருக்கு நேர் பேசிய தெய்வம் என்று வரலாற்று கதை ஒன்று கூறுவதால் பிரகதாம்பாளை பேசும் தெய்வம் என்றே அழைக்கின்றனர்.


பாறையின் மீதே கட்டப்பட்ட குடவறைக் கோயில்கள் கொண்ட மிகப் பழமையான கோயில்.


தல வரலாறு:

காமதேனுவுக்கு தேவேந்திரனால் சாபம் ஏற்பட்டு தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்து சேர்ந்தது.பின்பு கபில மகரிஷி, மங்கள மகரிஷி ஆகியோரை சேவித்து அவர்கள் அனுகிரகம் பெற்று தினந்தோறும் காசி போய் கங்கை நீரை கொண்டு வந்து ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து விட்டு மீதியை பாறையை கீறி அதில்விட்டு விடு என்று சொல்கிறார்கள்.பசுவின் பக்தியை சோதிக்க ஈஸ்வரன் புலியின் ரூபம் எடுத்து திருவேங்கை வாசல் வந்து சோதிக்கிறார். பசுவின் பக்தியை அறிந்து சாப்பிட்டுவிடுவேன் என்று இறைவன் பயமுறுத்தினார். பசுவோ விரத பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என காமதேனு, புலியிடம் (ஈசனிடம்) சொல்லி இங்குள்ள சுவாமியை வணங்கி விட்டு மீண்டும் செல்ல அங்கு திருவேங்கைவாசலில் காமதேனுவுக்கு மோட்சம் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் மிகச் சிறந்த குடைவறைக் கோயிலாக இன்றும் திகழ்கிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இது ஒரு குடவரைக் கோயில். இங்கு அரைக்காசு அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். ஏதேனும் பொருள் தொலைந்தால் “அரைக்காசு அம்மனுக்கு காணிக்கை’ எனக்கூறி சிறிது வெல்லத்தை எடுத்து வைத்து விட்டு தேடினால் உடனே கிடைத்துவிடும்.

About the author

Leave a Reply

Your email address will not be published.