பரமத்திவேலூர் மாவுரெட்டி அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில் – Paramathi Bheemeswarar Temple

அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

பீமேஸ்வரர்


ஊர்:

பரமத்திவேலூர், மாவுரெட்டி


மாவட்டம்:

சேலம்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

சிவராத்திரி, மார்கழி திருவாதிரை


தல சிறப்பு:

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன், பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமே “பீமேஸ்வரர்’ எனப் பெயர் பெற்றது.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிக பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில், பரமத்திவேலூர், மாவுரெட்டி, சேலம் மாவட்டம்.


போன்:


பொது தகவல்:

இங்கு சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், சனீஸ்வரர், பிரம்மா, நவக்கிரக சன்னதிகள் தனித்தனியே உண்டு.


பிரார்த்தனை


திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


தலபெருமை:

திருமணிமுத்தாறு சேலத்தில் உருவாகி பரமத்திவேலூர் நஞ்சை இடையாறு கிராமத்தில் காவிரியோடு சேர்கிறது. இந்த ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய ஐந்து திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை.


இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை.


தல வரலாறு:

பீமேஸ்வரர் கோயில் திருமணிமுத்தாற்றங்கரையில் நான்காவது கோயிலாக அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் அஸ்தினாபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல் கஷ்டத்திற்கு ஆளானார்கள். இப்பஞ்சத்தை தீர்க்க என்ன வழி என்று அரசகுருவிடம் கேட்டபோது, அசரீரி மூலம் தகவல் வந்தது. பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் வடதிசை நோக்கி செல்லவேண்டும். அங்கு ஒரு வனத்தில் புருஷாமிருகம் உள்ளது. அது மிகவும் சக்திவாய்ந்தது.


சிவன் அருள் பெற்றது. அதனை பிடித்துவந்தால் நாட்டில் கடும்பஞ்சம் தீரும் என்றது. இதனைக்கேட்ட பஞ்ச பாண்டவர்கள் வடதிசை நோக்கி அந்த மிருகத்தை பிடித்துவர சென்றனர். அம்மிருகத்தை பிடித்துவர சென்றபோது, இவர்களை கடுமையாக தாக்கியது. இவர்கள் பயந்து திருமணிமுத்தாற்றங்கரையில் ஓடிவரும்போது, தருமர் ஒரு லிங்கம் செய்து வழிபட்டார். அந்த மிருகம் லிங்கத்தை கண்டதும், சிவபக்தியால் சிவலிங்கத்தை சுற்றிவந்தது. இதனால் அந்த மிருகத்திடமிருந்து தப்பிக்க, திருமணிமுத்தாற்றங்கரையில் ஒன்றன்பின் ஒன்றாக லிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.


அந்த மிருகமும் ஒவ்வொரு லிங்கமாய் சுற்றிவந்து கோபம் தணிந்தது. இந்த சம்பவம் நடந்த மாவுரெட்டி என்ற ஊரில் உள்ள லிங்கம் பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டதால் இக்கோயிலுக்கு பீமேஸ்வரர் கோயில் என்று பெயர்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன், பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமே “பீமேஸ்வரர்’ எனப் பெயர் பெற்றது.

About the author

Leave a Reply

Your email address will not be published.