திருசென்னம் பூண்டி திருகடைமுடிநாதர் கோயில்

மூலவர்:


திருகடைமுடிநாதர், சித்தேஸ்வர், சிவசடையப்பர்


அம்மன்/தாயார்:

சித்தாம்பிகை


ஊர்:

திருசென்னம் பூண்டி


மாவட்டம்:

தஞ்சாவூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பவுர்ணமி, பிரதோஷம்


தல சிறப்பு:

இங்கு நவகிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. காரணம் இங்கு அமைந்து உள்ள இறைவனின் நேர் கோட்டில் கும்பகோணத்தில் உள்ள நவகிரக கோயில்கள் அமைந்து உள்ளது என்பது தனி சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு திருகடைமுடிநாதர் ( சித்தேஸ்வர் சிவசடையப்பர்) திருக்கோயில், திருசென்னம் பூண்டி, தஞ்சாவூர்.


போன்:

+91 9443241606,9345005793


பொது தகவல்:

இக்கோயில் கடந்த 937 வருடங்களாக பூஜையின்றி இருந்தது. மேலும் இப்பொழுது புதுவை சார்ந்த சிறுதொண்டு நாயனார் இறைபணி அமைப்பில் சார்பில் (பிரதோஷம் பவுர்ணமி) பூஜைக்கள் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் இக்கோயில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் திருப்பணி நடைபெற்று வருகிறது.


பிரார்த்தனை


இங்கு முக்கிய பிரார்த்தனையாக குழந்தை வரம் வேண்டுவோர் மற்றும் நவகிரகங்கள் தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டு தோஷ நிவர்த்தி பெறலாம்.


நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்தலாம்.


தல வரலாறு:

தஞ்சை மாவட்டம் திருசென்னம் பூண்டி கோவிலடி கிராமத்தில் காவேரி கரையில் அமைந்து உள்ள இத்திருக்கோயில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த பல்லவர் நந்தி கிருபதொங்கவர்மன் மன்னனால் கட்டப்பட்டது. இங்கு உள்ள இறைவன் திருகடைமுடிநாதர் சித்தேஸ்வர் சிவசடையப்பர் என்றும் அம்மன்சித்தாம்பிகை என்றும் அழைத்து வந்து உள்ளார்கள். இக்கோயில் தனிசிறப்பு இங்கு குழந்தை வரம் இல்லாதவர்கள் இந்த இறைவனை வழிபட்டு வந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதிகம். காரணம் இக்கோயில் கட்டிய மன்னன் கிருபதொங்கவர்மன் குழந்தை வரம் வேண்டி குழந்தை வரம் பெற்றான்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இங்கு நவகிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. காரணம் இங்கு அமைந்து உள்ள இறைவனின் நேர் கோட்டில் கும்பகோணத்தில் உள்ள நவகிரக கோயில்கள் அமைந்து உள்ளது என்பது தனி சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.