நெய்க் குப்பை அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – Sundareswarar Temple

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

சுந்தரேஸ்வரர்


அம்மன்/தாயார்:

சவுந்தரநாயகி


ஊர்:

நெய்க் குப்பை


மாவட்டம்:

தஞ்சாவூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை


தல சிறப்பு:

ஆவணி 19, 20,21 தேதிகளில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுகிறது.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நெய்க் குப்பை, தஞ்சாவூர் மாவட்டம் .


போன்:


பொது தகவல்:

திருமங்கைச்சேரி வரதராஜப் பெருமாள் கோயில், சொக்கநாத சுவாமி கோயில் இத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது.


வரதராஜர், நரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.


பிரார்த்தனை


திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


தலபெருமை:

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது, பூமியில் பல இடங்களில் அக்னி கோளங்கள் உருவாயின. அம்பிகை நெய்குப் பையில் கால் பதித்த போது, அவளது ஸ்பரிசத்தால் பூமி குளிர்ந்தது. நல்ல மழையும் பெய்தது. தன்னால் ஏற்பட்ட வெப்பத்தால் பூமியில் வெப் பம் பெருகியதும், அதனால் உயிரினங்கள் பட்ட அல்லல் கண்டும் வருந்திய நரசிம்மர், இத்தலத்தில் வரதராஜனாகக் கோயில் கொண்டார்.


பெருமாளைப் பிரிந்த திருமகள், பூலோகத்தில் கருப்பத்தூர் என்ற இடத் திற்கு வந்தாள். அது காடாக இருந்த காலம். (திருச்சி அருகிலுள்ள பகுதி). அங்கிருந்த சிவனை தியானித்து தவமிருந்த திருமகள், அவரருளால், தன் தலைவன் கொலுவிருந்த திருமங்கைச்சேரிக்கு வந்தாள். கணவரை வரதராஜனாகவும், நரசிம்மனாகவும் ஒரு சேர தரிசித்த பாக்கியம் பெற்றாள்.


பெயர்க்காரணம்:

நெய்க் குப்பை என்ற பெயர் வித்தியாசமாகத் தோன்றுகிறது. அம் பிகை பசுவாக வந்ததும், இங் குள்ள ஒரு கிணற்றில் பாலை பொழிந்தாள். கிணறை”கூபம்’ என்பர். அந்த கூபத்திலிருந்த பால் நெய்யாக மாறியது. “நெய்க்கூபம்’ என்ற பெயரே நாளடைவில் திரிந்து “நெய் கூபை’ ஆகி, இன்று நெய்குப் பையில் வந்து நிற்கிறது.


சூரியனும் தன் கடமையை மறந்த காரணத்தால் சாப விமோசனம் அடைய விரும்பி, இத்தலத்து இறைவன் மீது ஆவணி 19, 20,21 தேதிகளில் இங்கு வந்து சுந்தரேஸ்வரரை தரிசிக்கிறார். அவரது ஒளி லிங்கத்தில் படுகிறது. திருமங்கைச்சேரி வரதராஜப் பெருமாள் கோயில். நெய்க்குப்பையின் அருகிலுள்ள திருமங்கைச் சேரி வரதராஜப் பெருமாள் கோயிலின் வரலாறும் பக்தர்களை பரவசமடையச் செய்யும்.


பாம்புப்புற்றுடன் கூடிய புன்னாக வரதன் சன்னதி இங்குள்ளது. மிகச் சிறந்த நாகதோஷ தலமாகவும் விளங்குகிறது. திருமங்கைச்சேரி சொக்கநாதர் கோயில் மதுரையை ஆண்ட பாண் டிய மன்னன் சமண சமயத்தை தழுவினார். அவரது மனைவி மங்கையர்க்கரசியார் மீண்டும் அவரை சைவராக்கினார். இதனால், ஏற்பட்ட மன மகிழ்ச்சியில், தான் பிறந்த சோழநாட்டில் மதுரை சுந்தரேஸ்வரருக்கு கோயில் அமைத்தாள்.


ஆனால், மீனாட்சி என்ற பெயர் மதுரைக்குரியதாக இருந்ததால், அம்பிகைக்கு சோழ முறைப்படி சவுந்தரநாயகி என பெயர் சூட்டினாள். அற்புதமான தலம் இது.


தல வரலாறு:

உமையவளின் மூலமாக பசுபதிநாதரான சிவபெருமான், பூமிக்கு வேத சக்திகளை அனுப்ப நினைத் தார். நான்கு வேதங்களின் கருத்துக்களையும் பந்து போன்ற கோள்களாக (கிரகங்கள்) மாற்றினார். அந்தக் கோள்களை பந்தாடி, மேலும் கீழுமாக அசைத்து வேத சக்திகளை பரவெளிக்கு அம்பிகை செலுத்தினாள்.


வேதக்கோள்கள் பெரும் ஒளிமிக்கவையாகத் திகழ்ந் தன. இதன் ஒளியைக் கண்டு, பேரொளி மிக்க சூரியனே அதிசயித்து விட்டான். ஏனெனில், அந்த ஒளியின் முன்பு சூரியனின் ஒளி கடுகைப் போல் சுருங்கி விட்டது. இந்த மலைப்பிலும், அம்பிகையே அந்த கோள்களை பந்தாடி விளையாடுவதற்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நோக் கத்திலும், தான் மறையும் நேரத்தை சூரியன் தள்ளி வைத்தான். இதனால், சகல லோகங்களிலும் சாயங்கால பூஜைகள் ஸ்தம்பித்து விட் டன.


சூரிய அஸ்தமன நேரம் மாறியது கண்டு கோபமடைந் தது போல் நடித்த சிவபெருமான், அம்பிகையின் முன் நேரில் வந்தார். அம்பிகை அந்த கோபம் கண்டு ஒதுங்கி நின்றாள். அப்போது நான்கு வேதக் கோள்களும் அப்படியே வானில் அந்தரத்தில் நின்று விட்டன.


அம்பிகையை அழைத்த சிவன், “”உன் விளையாட் டால் சூரிய அஸ்தமனம் தள் ளிப் போனது. உலக இயக்கம் ஸ்தம்பித்தது. எனவே, நீ பூலோகம் செல்ல வேண்டும். பசு வடிவில் தங்க வேண்டும். நீ வேதப்பந்துகளை உதைத்ததால், உன் கால்கள் வேதசக்தி பெற்றுள்ளன. பசுவாக மாறும் நீ பூலோகமெங்கும் சென்று அந்த வேதசக்தியைப் பரப்ப வேண்டும்,” என உத்தரவிட்டார்.


“”பூமியெங்கும் நடந்தே போய், எப்படி வேதசக்தியை பரப்ப முடியும்? இது சாத்தியமற்ற செயலாயிற்றே,” என ஐயம் கொண்ட அன்னை, தன் சகோதரன் திருமாலை துணைக்கழைத்தாள். அவர் வேதத்தை வராக வடிவில் தன் மூக்கில் தாங்கியவர். நந்தகோபாலன் என்ற பெயரில் அம்பிகையுடன் பூமிக்கு வந்தார். அம்பிகை பாதம் பட்ட இடமெல்லாம் வேதசக்தி பரவியது. அம்பிகை பூமிக்கு வந்த போது, முதன் முதலில் கால் பதித்த இடமே இன்றைய நெய்க்குப்பை கிராமம்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

ஆவணி 19, 20,21 தேதிகளில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுகிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published.