முழையூர் அருள்மிகு பரசுநாதர் திருக்கோயில் – Parasunathar Temple

அருள்மிகு பரசுநாதர் திருக்கோயில்


மூலவர்:

பரசுநாதர்


அம்மன்/தாயார்:

ஞானாம்பிகை


ஊர்:

முழையூர்


மாவட்டம்:

தஞ்சாவூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

அட்சய திரிதியை, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை


தல சிறப்பு:

பரசுநாத லிங்கம் பீஜாட்க்ஷர லிங்க வடிவைச் சார்ந்தது. “நீண்ட கூம்பு நெடுந்திடை லிங்கம்’ என்பது இதன் பொருள். வட்டவடிவில், எட்டுப் பட்டைகளுடன் இது காட்சி தருகிறது. இந்தக் கோயில் கருவறை கோஷ்டத்தில் (சுற்றுச் சுவர்) லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு பரசுநாதசுவாமி திருக்கோயில், முழையூர் – தஞ்சாவூர்-மாவட்டம்.


போன்:

+91 4374 267 237


பொது தகவல்:

பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், உச்சிஷ்ட கணபதி, அப்பர், சம்பந்தர் ஆகியோர் உள்ளனர்.


பிரார்த்தனை


திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


நேர்த்திக்கடன்:

அட்சய திரிதியை நாளன்று மல்லிகை பூக்களை தங்கள் கையாலேயே தொடுத்து, பக்தர்கள் இறைவனுக்கு அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


தலபெருமை:

இந்தக் கோயில் கருவறை கோஷ்டத்தில் (சுற்றுச் சுவர்) லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார். லிங்கோத்பவர் என்பது பிரம்மனும், விஷ்ணுவும் சிவனின் முடியையும் அடியையும் காணச் சென்ற கோலமாகும். அதற்கு பதிலாக சிவபெருமான் தன்னில் பாதியை பார்வதி தேவிக்கு வழங்கிய அர்த்தநாரீஸ்வரர் கோலம் கோஷ்டத்தில் இருப்பது சிறப்புக்குரியது. இங்குள்ள


பரசுநாத லிங்கம் பீஜாட்க்ஷர லிங்க வடிவைச் சார்ந்தது. “நீண்ட கூம்பு நெடுந்திடை லிங்கம்’ என்பது இதன் பொருள். வட்டவடிவில், எட்டுப் பட்டைகளுடன் இது காட்சி தருகிறது. மேற்கு பார்த்த திருத்தலம் இது. தேவார வைப்புத் தலங்களில் இதுவும் ஒன்று. பாடல் பெற்ற தலம் என்பது அப்பர், சம்பந்தர், சுந்தரரால் நேரடியாக பாடல் பெற்றதாகும். வைப்புத்தலம் என்றால், ஏதாவது ஒரு கோயிலைப் பற்றி பாடும்போது, இன்னொரு கோயிலின் சிறப்பையும் இணைத்து பாடுவதாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் வேலுக்கு பதிலாக சக்திக்குரிய சூலத்தை தாங்கியிருக்கிறார். அதையும் இடது கை நடுவிரலின் நுனியில் தாங்கியிருப்பது விசேஷம்.


முழவு வாத்தியம்:

இந்த ஊருக்கு முழையூர் என பெயர்வர காரணம் இருக்கிறது. அக்காலத்தில் முழை எனப்படும் வாத்தியத்தில் வேத இசை ஒலியை துல்லியமாக வாசிப்பார்கள். அட்சய திரிதியை நாளன்று சிவலோகத்தில் பூதகணங்கள் இந்த வாத்தியத்தை வாசிப்பதுண்டு. இது ஒரு வகை மேள வாத்தியம். இதை வாசிக்கும்போது பத்தாயிரம் கஜ தூரம் உயரே குதித்து பூதகணங்கள் வாசிப்பார்கள்.


திரிதியை பூஜை:

இத்தலத்தில் திரிதியை திதி நாட்களில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. அட்சய திரிதியை மட்டுமின்றி எல்லா வளர்பிறை, தேய்பிறை திரிதியை திதிகளில் சுவாமிக்கு நெய் அன்னம் படைத்து வழிபடுகின்றனர். உணவு தொடர்பாக உடலில் ஏற்படும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், செரிவின்மை போன்ற நோய்களுக்கு நிவாரணம் வேண்டி இந்த பூஜையை செய்கின்றனர். முடங்கிக் கிடக்கும் பணம், தரிசாக கிடக்கும் நிலம், தோட்டம், வீடு ஆகியவை விருத்தி பெறுவதற்காக அட்சய திரிதியை அன்று மாதுளை முத்துக் களால் காப்பிட்டு, பரசுநாதரை வணங்குகின்றனர். அட்சய திரிதியை அன்று விநாயகர், பரசுநாதர், ஞானாம்பிகை, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலா வருவர். பிறரை நம்பி ஜாமீன் கொடுத்து ஏமாந்து பணக் கஷ்டத்தில் சிக்கியவர்களுக்காக இந்த கோயிலில் சிறப்புபூஜை செய்யப்படுகிறது. திரிதியை நாளன்று மல்லிகை பூக்களை தங்கள் கையாலேயே தொடுத்து, பக்தர்கள் இறைவனுக்கு அணிவிக்கிறார்கள்.


தல வரலாறு:

தந்தையின் உத்தரவுப்படி தனது தாயை வெட்டிய பரசுராமர், பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபூஜை செய்தார். அவர் முழையூர் திருத்தலத்திற்கு வந்தார். ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தார். அவருடைய தோஷம் நீங்கியது. இதன் காரணமாக சுவாமிக்கு “பரசுநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது. அம்பாள் ஞானாம்பிகையுடன், பரசுநாதர் கோயில் கொண்டுள்ள இந்த தலம் பாழ்பட்டு கிடந்தது. உள்ளூர் பக்தர் களின் முயற்சியால் ராஜகோபுரம் சீரமைக்கப் பட்டு, கோயிலுக்குள் உழவாரப்பணி நடந்துவருகிறது. இங்கே ஒரு காலத்தில் மகாமகம் போல மிகப்பெரிய அளவில் திரிதியை விழா நடந்திருக்கிறது. வட மாநில பக்தர்களும் வந்தார்கள். அப்போது தங்கக்காசுகளால் சுவாமிக்கு காப்பிடப்படும். பிறகு இது படிப்படியாக குறைந்து விட்டது. சமீப காலமாக இந்தத்தலம் மீண்டும் புகழ் பெற்று வருகிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

பரசுநாத லிங்கம் பீஜாட்க்ஷர லிங்க வடிவைச் சார்ந்தது. “நீண்ட கூம்பு நெடுந்திடை லிங்கம்’ என்பது இதன் பொருள். வட்டவடிவில், எட்டுப் பட்டைகளுடன் இது காட்சி தருகிறது. இந்தக் கோயில் கருவறை கோஷ்டத்தில் (சுற்றுச் சுவர்) லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published.