கைலாசபட்டி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் – Kailasanathar Temple

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்


மூலவர்:

கைலாசநாதர்


அம்மன்/தாயார்:

சிவகாமியம்மன்


தல விருட்சம்:

வில்வம்


தீர்த்தம்:

சுனைநீர்


ஊர்:

கைலாசபட்டி


மாவட்டம்:

தேனி


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பிரதோஷம், பவுர்ணமி கிரிவலம், ஆடி அமாவாசை, கார்த்திகை மகாதீபம்.


தல சிறப்பு:

இங்குள்ள வெள்ளை விநாயகர் குடைவரை விநாயகராக அமைக்கப்பட்டிருப்பது கோயிலின் தனி சிறப்பு. இங்குள்ள மூலவர் லிங்கத்திருமேனியராக உள்ளார்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி, தேனி மாவட்டம்.


பொது தகவல்:

பெரியகுளம்-தேனி மெயின் ரோட்டில் கைலாசபட்டியில் இருந்து கைலாசநாதர் கோயில் நுழைவு ஆர்ச் வழியாக இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் மலையடிவாரத்தை அடையலாம். அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்ல தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. அடிவாரத்தில் வெள்ளை விநாயகர், சந்திர லிங்கம் அமைந்துள்ளது.


பிரார்த்தனை


திருமணம் கைகூட, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள மூலவரை வழிபடுகின்றனர்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

இங்குள்ள வெள்ளை விநாயகர், குடைவரை கோயிலாக அமையப்பெற்றது. பிள்ளையார்பட்டி விநாயகருக்கு அடுத்த படியாக குடைவரை விநாயகராக இந்த வெள்ளை விநாயகர் சிறப்பு பெற்றவர். பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்கள் நோய்கள் விலகி ஆரோக்கியத்தை தரும் ஆற்றல் கொண்டது இந்த மலை. அத்துடன் நவகிரக குன்றுகளையும் சுற்றி வந்த பலன் கிடைப்பதால், கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.


தல வரலாறு:

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான வரலாற்று சிறப்புமிக்கது. அகத்திய முனிவர் இத்திருத்தலத்தை பற்றி கைலாசநாதர் கோயில் கண்டேன். அங்கு ஓர் சுனை கண்டேன் என்று பாடியுள்ளார். இம்மலைக்கு தியான மலை என்ற பெயரும் உண்டு. சட்டநாத மாமுனிவர் இம்மலைக்கு வந்து தியானம் செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது. கைலாசநாதர் மலைக்கு திருவாச்சி போன்று மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது சிறப்பு. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இத்திருக்கோயிலில் பெரிய தேர் இழுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாக மலையில் இரும்பு வடம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் உள்ளன.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இங்குள்ள வெள்ளை விநாயகர் குடைவரை விநாயகராக அமைக்கப்பட்டிருப்பது கோயிலின் தனி சிறப்பு. இங்குள்ள மூலவர் லிங்கத்திருமேனியராக உள்ளார்.

About the author

Leave a Reply

Your email address will not be published.