குன்னத்தூா் கோதபரமேஸ்வரா் (கைலாசநாதர்) கோயில்

மூலவர்:


கோதபரமேஸ்வரா் (எ) கைலாசநாதர்


அம்மன்/தாயார்:

சிவகாமி அம்மன்


தல விருட்சம்:

வில்வம்


தீர்த்தம்:

தாமிர புஷ்கரணி


ஆகமம்/பூஜை :

காமிக ஆகமம்


ஊர்:

குன்னத்தூா்


மாவட்டம்:

திருநெல்வேலி


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

ராகு பெயர்ச்சி சிறப்பு பூஜை, ஞாயிற்றுக்கிழமை ராகுகால பூஜை.


தல சிறப்பு:

இத்தலத்து இறைவனை வழிபடுதல் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சிவபெருமானை வழிபடுதலுக்குச் சமமான ஒன்று.


திறக்கும் நேரம்:

காலை:

7.30 மணி முதல் 10.45 மணி வரை, மாலை: 5.00 மணி முதல் 6.30 மணி வரை

முகவரி:

அருள்மிகு கோதபரமேஸ்வரா் திருக்கோயில் கீழத்திருவேங்கடநாதபுரம் திருநெல்வேலி


போன்:

+91 9442018567


பொது தகவல்:

இத்திருக்கோயிலின் வெளிபிரகாரத்தில் ஒரே கல்லி்ல் வடிவமைக்கப்பட்ட திருவாச்சியுடன் கூடிய ஆறுமுகநயினார் சந்நிதி உள்ளது.மூலவர் லிங்கம் மார்பில் சர்ப்பம் போல் முத்திரை காணப்படும்.


பிரார்த்தனை


இத்தலமானது ராகுவின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோர் பரிகாரம் செய்ய வேண்டிய தலமாகும்.


இது ராகு தலம் மற்றும் நவகயிலாயத்தில் நான்காவது தலம் ஆகும். இத்தலம் திருமணத்தடை குழந்தை பாக்கியம், காலதோஷம், நாகதோஷம் ஆகியவற்றிற்கு பரிகாரத் தலமாகும். வயிற்றுக்கோளாறு, மனநோய், மூலநோய் நீங்கும்.


நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.


தல வரலாறு:

நவக்கிரகங்களில் ராகு பரிகாரத்திற்குரிய நவகைலாய தலமிது.குன்னத்தூா் என்கிற இவ்வூ செங்காணி எனவும் அழைக்கப்படுகிறது.காணி என்றால் நிலம் செங்காணி என்றால் செம்மண் பொருந்திய நிலம் எனப்பொருள்படும்.முற்காலத்தில் குன்னத்தூர் கீ்ழ்வேம்பு நாட்டு செங்காணியான நவணிநாராயண சதுர்வேதி மங்கலம் என அழைக்கபட்டு வந்தது.இத்திருக்கோயில் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கக்கூடும் என்பது இத்திருக்கோயில் கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகிறது.கோயில் பூஜைகளை நடத்த வீரபாண்டிய மன்னன் 4,200 பணம் கொடுத்துள்ளதும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.இக்கோயிலில் நில அளவு கோல் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.ஊரில் ஏற்படும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகளின் போது இந்த நில அளவுகோல் பயன்படுத்தப்பட்டதாக கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி,அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் செப்பேடு ஒன்றில் இத்திருத்தலத்தின் பெயர் திருநாங்கீசநேரி என்றும் இத்தலத்து இறைவன் திருநாகீசர் (இராகுத்தலமான திருநாகேசுவரம் போன்று) என்றும் அழைக்கப்பட்டுள்ள செய்தி தெரியவருகிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இத்தலத்து இறைவனை வழிபடுதல் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சிவபெருமானை வழிபடுதலுக்குச் சமமான ஒன்று.

About the author

Leave a Reply

Your email address will not be published.