நல்லூர் அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயில் – Visveswara Swami Temple

அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயில்


மூலவர்:

விஸ்வேஸ்வர சுவாமி


அம்மன்/தாயார்:

விசாலாட்சி


தல விருட்சம்:

வில்வமரம்


ஊர்:

நல்லூர்


மாவட்டம்:

திருப்பூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

மார்கழியில் வரும் திருவாதிரைத் திருவிழாவும், மாசியில் வரும் மகா சிவராத்திரிப் பெரு விழாவும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.


தல சிறப்பு:

காசிக்கு நிகரான தலம் என்று போற்றப்படும் நல்லூர் விஸ்வேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு, மகா சிவராத்திரி நாளில் வந்து தரிசித்தால் மங்கலகரமான வாழ்வு வரமாகப் பெறுகின்றன என்று பக்தர்கள் கூறுகின்றனர்.


திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

விசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வரசுவாமி, சுப்ரமணியசுவாமி திருக்கோவில் நல்லூர்-641 606 திருப்பூர் தாலுகா திருப்பூர் மாவட்டம்


போன்:

+91 94423 73107 ; 94422 33768.


பொது தகவல்:

கோயிலின் ஸ்தல விருட்சம் வில்வமரம். மூலவர் விஸ்வேஸ்வரர். அம்பாள்- விசாலாட்சி. இங்கே பட்டி விநாயகர், சுப்ரமணியர், நந்திதேவர், கங்காதேவி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சரபேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.


பிரார்த்தனை


இந்தக் கோயிலில் உள்ள சரபேஸ்வரரை, தொடர்ந்து 24 ஞாயிற்றுக்கிழமைகள் வணங்கி வழிபட்டால், பில்லி சூனிய ஏவல்கள் அனைத்தும் விலகி ஓடும் என்பது ஐதீகம்!


நேர்த்திக்கடன்:

வியாழக்கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு முல்லைப்பூவை அணிவித்து மஞ்சள் வஸ்திரம், கொண்டைக் கடலை மாலை சார்த்தி, பிரார்த்திக்க, கல்வியில் சிறக்கலாம். திங்கள் கிழமைகளில் இங்கு வந்து, சிவனாருக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட, நல்ல வாழ்க்கைத் துணை வாய்க்கப் பெறலாம்; பிள்ளை வரம் கைகூடும் என்பது ஐதீகம்.


தலபெருமை:

மாசி மகா சிவராத்திரி நன்னாளில் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் சிவனாரைத் தரிசித்தால், காசியம்பதிக்குச் சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். நம் பாவங்கள் தொலைந்தோடும் என்பது நம்பிக்கை!


தல வரலாறு:

திருப்பூர் மாவட்டத்தில் பழமை வாய்ந்த கோயில்களில் விஸ்வேஸ்வர ஸ்வாமி கோயில் ஒன்று உள்ளது. சுந்தரபாண்டியன் எனும் மன்னன் கட்டிய கோயில் இது என்றும், இதனால் இந்தப் பகுதி ஒரு காலத்தில் சுந்தரபாண்டிய நல்லூர் என அழைக்கப்பட்டதாகவும் சொல்வார்கள்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால், நல்லூர் எனும் கிராமத்தை அடையலாம்.

About the author

Leave a Reply

Your email address will not be published.