பேரம்பாக்கம் சோழீஸ்வரர் கோயில்

மூலவர்:


சோழீஸ்வரர்


அம்மன்/தாயார்:

காமாட்சி அம்மன்


தல விருட்சம்:

வில்வம்


தீர்த்தம்:

கூவம் ஆறு


ஊர்:

பேரம்பாக்கம்


மாவட்டம்:

திருவள்ளூர்


மாநிலம்:

தமிழ்நாடு


பாடியவர்கள்:


திருவிழா:

காணும் பொங்கல் ஆற்றுத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், கார்த்திகை.


தல சிறப்பு:

தெற்கு நோக்கி அமைந்த வாசல் கொண்ட கோயில்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளூர். பேரம்பாக்கம்.


போன்:

+91 94431 08707, 94451 27892.


பொது தகவல்:

வள்ளி, தெய்வானை சமேத முருகன், துர்க்கை, ஐயப்பன், நாகர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.


பிரார்த்தனை


நரம்புக் கோளாறு நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


தலபெருமை:

நரம்பு மருத்துவர்:

இக்கோயிலின் சிறப்பே நரம்பு கோளாறுகளை நீக்கும் அரிய மருத்துவராக, இறைவன் விளங்குவதாகும். இவ்வூரில் உள்ள பெரியவர் ஒருவர் நரம்பு கோளாறினால், படுக்கையில் கிடந்தார். அவரை சோதித்த மருத்துவர்கள் ஏராளமாக செலவாகும் என்றனர். பெரியவரோ சோழீஸ்வரர் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை பலித்ததால், தன் நோய்க்கு செலவாக இருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தில் கோயிலுக்கு கொடி மரம் அமைத்துக் கொடுத்தார்.


ஓம் சக்தி விநாயக நம:

என்பதாகும். இங்குள்ள சக்திகணபதி முன் இந்த மந்திரத்தை 108 தடவை சொல்வோருக்கு நினைத்தது கைகூடும். இங்குள்ள காமாட்சி அம்மன் பக்தர் குறைதீர்க்கும் கருணைக்கடலாக, தெற்கு நோக்கி நிற்கிறாள். வள்ளி, தெய்வானை சமேத முருகன், துர்க்கை, ஐயப்பன், நாகர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. தல விருட்சம் வில்வம். தீர்த்தம் கூவம் ஆறு.


தல வரலாறு:

சோழர் காலத்தில் பேரம்பாக்கம் அந்தணர்கள் வாழ்ந்த ஊராக விளங்கியது. இங்குள்ள சோழீஸ்வரர் கோயில், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், 1112ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சுவாமியின் அன்றைய திருப்பெயர் குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மகாதேவர். நாளடைவில் சோழீஸ்வரர் ஆகசுருங்கிவிட்டது. 1947ல், இந்திய கல்வெட்டு துறை ஆய்வின் மூலம் இவ்வூரில் 14 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இவற்றின் வாயிலாக கோயில் பூஜைக்கு தீபம் ஏற்ற, நன்கொடை அளித்தது குறித்து அறிய முடிகிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

தெற்கு நோக்கி அமைந்த வாசல் கொண்ட கோயில்.

About the author

Leave a Reply

Your email address will not be published.