ஊட்டியாணி அருள்மிகு ஐராவனேஸ்வரர் திருக்கோயில் – Airavaneswarar Temple

அருள்மிகு ஐராவனேஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

ஐராவனேஸ்வரர்


அம்மன்/தாயார்:

அகிலாண்டேஸ்வரி


தல விருட்சம்:

வில்வம்


தீர்த்தம்:

பிரம்ம தீர்த்தம்


ஆகமம்/பூஜை :

காமிக ஆகமப்படி பூஜை


புராண பெயர்:

முதன் முதலில் சிவன் ஆன்மாக்களுக்காக நெற்பயிரை வளர்த்து உலகத்தோர்க்கு உவந்து அளித்த இடம் என்பதால் இப்பகுதிக்கு ஊட்டியாணி எனப்பெயர் வந்துள்ளது.


ஊர்:

ஊட்டியாணி


மாவட்டம்:

திருவாரூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி போன்ற விழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.


தல சிறப்பு:

சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் 21, 22 மற்றும் 23 தேதிகளில் காலை 6 மணயில் இருந்து 6.15 மணி வரை சிவன் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு ஐராவனேஸ்வரர் திருக்கோயில், புள்ள மங்கலம் அஞ்சல், நீடாமங்கலம் தாலூகா, ஊட்டியாணி, திருவாரூர் மாவட்டம் 610209.


போன்:

+91 90479 22254


பொது தகவல்:

இத்திருக்கோயில் மூலவர் மற்றும் அம்பாள் ஒரு கலசத்துடன் கூடிய தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்தி, காலபைரவர், சண்டிகேஸ்வரர், விநாயகர் மற்றும் பாலமுருகன் அருள்பாலிக்கின்றனர். நீண்ட காலமாக முட்புதற்கள் மண்டி கிடந்த சிவனுக்கு கோயில் கட்டியது 2013 ம் ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.


பிரார்த்தனை


நாகதோஷத்திற்கு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குவதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைகள் நிறைவேறியதும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர்.


தலபெருமை:

இத்திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது. சோழர்கள் கட்டிய 108 கோயில்களில் இதுவும் ஒன்று.முதன் முதலில் சிவன் ஆன்மாக்களுக்காக நெற்பயிரை வளர்த்து உலகத்தோர்க்கு உவந்து அளித்த இடம் என்பதால் இப்பகுதிக்கு ஊட்டியாணி எனப்பெயர் வந்துள்ளது. ஈசன் பக்கதர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களை வழங்கி, இன்னல்களை போக்கி நல்வாழ்வு வாழ அருள்பாலிகிறார்.


தல வரலாறு:

சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இக் கோயில் புதையுண்டு முட்புதற்கள் மண்டி இருந்தது. கோயில் இருந்த இடம் தெரியாமல் இருந்தது. தற்போது கோயில் உள்ள இடத்தில் செங்கல் சூளை போட்டு வந்தனர். அப்போது தோண்டிய நிலையில் கிடைத்த விக்கரங்களை மெத்தனப் போக்காக போட்டுள்ளனர். சில தினங்களில் அப்பகுதியைச் சேர்ந்த மாறன் என்பவர் கனவில் தோன்றி ய ஈசன் தனக்கு கோயில் அமைக்க தெரிவித்ததின் பேரில் விழாக்குழு அமைத்து கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 2013 ஜூன் மாதம் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் 21, 22 மற்றும் 23 தேதிகளில் காலை 6 மணயில் இருந்து 6.15 மணி வரை சிவன் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.