மூலவர்:
காசி விஸ்வநாதர்
அம்மன்/தாயார்:
விசாலாட்சி
தல விருட்சம்:
வில்வம்
தீர்த்தம்:
சிவக்குளத்து தீர்த்தம்
ஊர்:
எட்டியலூர்
மாவட்டம்:
திருவாரூர்
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி, அன்னாபிஷேகம்
தல சிறப்பு:
காசியிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் எட்டியலூர், திருக்கண்ணமங்கை அஞ்சல், குடவாசல் தாலுகா, திருவாரூர்-610104.
போன்:
+91 99427-40907
பொது தகவல்:
இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் எதிரில் திருக்குளம் அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் அருள்பாலிக்கிறார்கள். கற்பகிரகத்தில் அம்பாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இங்கு திருநாவுக்கரசருக்கு தனி சன்னதி அமைந்திருப்பது சிறப்பு.
பிரார்த்தனை
சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கவும், காசிக்கு செல்ல இயலாதவர்களும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும், அன்னாபிஷேகம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
திருவாரூர் தியாகராஜர் கோயில் எட்டிய தொலைவில் உள்ளதால் எட்டியலூர் என்றும், இப்பகுதியில் தானியங்கள் மற்றும் மலர்கள் எட்டுவகையானது உற்பத்தி செய்து தியாகராஜர் கோயிலுக்கு அனுப்பியதால் எட்டு இயல்புகளையுடைதால் எட்டியலூர் என மறுவியதாகவும் கூறப்படுகிறது.
தல வரலாறு:
சோழ மன்னர் அவர் மண்டலத்தில் 108 கோயில் கட்டியதில் இப்பகுதியில் உமா மகேஸ்வரி உடனுறை உமா மகேஸ்வரர் திருக்கோயில் அமைந்தது சிறப்பு. மேலும் இப்பகுதியில் காசியிலிருந்து பிரதிஷ்டை செய்த விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இக்கோயில் நாளடைவில் பராமரிப்பில்லாமல் சிதலமடைந்துவிட்டது. அச்சமயம் இவ்வூரில் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஒரு தலையாறி கனவில் இறைவன் தோன்றி மூன்று சுமங்கலி பெண்களை தண்ணீர் கொண்டு வந்து என் திருமேனியை சுத்தம் செய்து, மிளகாய் சாந்து அறைத்து தடவி வழிபாடு நடத்தினால் கட்டாயம் மழை வரும் பஞ்சம் தீரும் என்று கூறினார். இதை தலையாறி ஊர் பெரியவரிடம் கூறினார். அதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில தினங்கள் கடந்த பின் தலையாறி கூறியதை நிறைவேற்றினார்கள். உடனே மழை பெய்து அப்பகுதி செழிப்பானது. அதன்பின் காட்டில் மறைந்து கிடந்த சிவலிங்கம் உள்ளிட்ட பல விக்கரஹங்களை பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். காசிக்கு செல்ல இயலாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடுவது சிறப்பு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
காசியிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்.