கீழப்புளியூர் நாகநாதசுவாமி கோயில்

மூலவர்:


நாகநாதசுவாமி


அம்மன்/தாயார்:

புஷ்பவள்ளி


தல விருட்சம்:

கொன்றை


தீர்த்தம்:

பிரம்மதீர்த்தம்


ஊர்:

கீழப்புளியூர்


மாவட்டம்:

திருவாரூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம்


தல சிறப்பு:

சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் 21, 22 மற்றும் 23 தேதிகளில் காலை 6 மணியிலிருந்து 6.15 மணி வரை சிவன் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் கீழப்புலியூர், குழிக்கரை அஞ்சல், திருவாரூர்- 613704.


போன்:

+9194424 67891


பொது தகவல்:

இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவாயிலில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. பிரகாரத்தில் சித்திவிநாயகர், நர்த்தன விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, காளியுடன் சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவர், மகாலட்சுமி, சனீஸ்வரன், சூரியன், சந்திரன், துர்கை ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.


பிரார்த்தனை


நாகதோஷம் நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


தலபெருமை:

இத்திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்ததும், புரான சிறப்பும் பெற்றது. இங்கு நாகநாதசுவாமியும் புஷ்பவள்ளித்தாயாரும், பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களை வழங்கி, இன்னல்களை போக்கி நல்வாழ்வு வாழ காட்சியளித்து அருள்பாலிகின்றனர்.


ளியமரங்கள் அதிகம் இருந்துள்ளது. இங்கு உற்பத்தியான புளிகள் பல்வேறு பகுதிகளுக்கு மாட்டு வண்டி மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்பட்டதால், புளிப்பூர் என்றாகி பின்னாளில் கீழப் புலியூர் என மறுவியுள்ளது.


தல வரலாறு:

மராட்டிய வம்சத்தினரால் கட்டப்பட்ட மிகவும் பழயை வாய்ந்த கோயில். முன்னொரு காலத்தில், மராட்டிய வம்சத்தை சேர்ந்த வேதபாடம் சொல்லி தந்த வாத்தியார் ஒருவர் நாகதோஷம் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை அடைந்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய ஈசன் ஈர உடையுடன் வந்து தன்னை வணங்கினால் தோஷம் நீங்கும் என கனவில் கூறியுள்ளார். அவ்வாறு வணங்கிய வாத்தியாருக்கு நாகதோஷம் நீங்கியது. அதன் பின் அவர் சிறு கோயில் கட்டியுள்ளார். மராட்டி வம்சத்தை சேர்ந்த மன்னர் மகளுக்கு ஏற்பட்ட நாகதோஷத்தை நீக்கியதால் அவர்காலத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் 21, 22 மற்றும் 23 தேதிகளில் காலை 6 மணியிலிருந்து 6.15 மணி வரை சிவன் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.