மூலவர்:
காசிவிஸ்வநாதர்
அம்மன்/தாயார்:
விசாலாட்சி
தல விருட்சம்:
பலா, வெள்ளெருக்கு, பன்னீர், வன்னி, வில்வம்
தீர்த்தம்:
திருக்குளம்
ஊர்:
பழவனக்குடி
மாவட்டம்:
திருவாரூர்
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபவிழா, பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம்
தல சிறப்பு:
சிவன் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 10 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் பழவனக்குடி, கொரடாச்சேரி, குடவாசல் தாலுகா, திருவாரூர் -613703.
போன்:
+91 9443108486, 9360582158
பொது தகவல்:
ப வடிவில் நீரோட்டம் சூழ்ந்தப்பகுதியில் கிழக்குப்பக்கம் நுழைவு வாயில் அமைந்துள்ளது. காசிக்கு செல்லாதவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன், தெற்கு பக்கம் தட்சிணாமூர்த்தி, வடக்குப் பக்கம் துர்கை, தெற்குபக்கம் சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் உடன் லிங்கோத்பவர், மேற்கு பக்கம் பைரவர் அருள்பாலிக்கின்றனர். நுழைவு வாயில் சிறபங்கள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் எதிரில் தீர்த்க்குளம் உள்ளது. மடப்பள்ளி எதிரில் மகாமண்டம் உள்ளது.
பிரார்த்தனை
திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
காசியை வீட வீசம் கூட என்ற அடை மொழிக்கு சிறப்பிடம் பெற்றது. இங்குள்ள சிவன் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. சோழர்காலத்தினர்கள் மற்றும் மன்னர்கள் வழிபாடு செய்துள்ளனர். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள சிவனை வணங்கினால் காசிக்கு சென்ற பலன் கிட்டும் என்பதால் அதிகளவில் பக்தர்கள் வந்துசெல்கின்றனர். 1968, 2000 மற்றும் 2013 ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இக்கோயிலில் வளர்ந்த வெள்ளெருக்கு நாரில் சிறு கயிராக்கி குழந்தைகளுக்கு இடுப்பில் கட்டியதால் பல்வேறு நோய்கள் குணமாகியதால் இப்பகுதியில் அதிகளவில் எருக்கு வளர்க்கப்பட்டுள்ளது.
தல வரலாறு:
இப்பகுதியில் முற்காலத்தில் இருந்த தோட்டத்தில் அதிகளவில் பழங்கள் விளைவித்து அரசவம்சத்திற்கு கொடுத்தப்பட்டதால் பழவனக்குடி என பெயர் வந்துள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
சிவன் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது.