கேசாவரம் கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் கோயில்

மூலவர்:


கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர்


தீர்த்தம்:

மோக்ஷநதி


ஊர்:

கேசாவரம்


மாவட்டம்:

வேலூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம்


தல சிறப்பு:

சிவரத்ன பூதத்தினால் தவமிருந்து அனுதினமும் பூஜிக்கப்படும் தலமாகும். சோழ சக்ரவர்த்தியான முதலாம் குலோத்துங்க சோழன் தரிசித்து மனபாரம் நீங்கிய தலம்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 9.30 மணி வரை, (விஷேச காலங்களில் மாலையிலும் திறந்திருக்கும்


முகவரி:

அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில், கேசாவரம், புதுகேசாவரம் கிராமம். தக்கோலம் அஞ்சல், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்.


போன்:

+91 9443052489, 8883930005.


பொது தகவல்:

கோஷ்டத்தில் கலையழகு கொஞ்சும் தொந்திக் கணபதி குண்டு முயலகனை காலில் மிதித்துக் கொண்டிருக்கும் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவருக்கு மேல் விமானத்தில் பிரயோகச் சக்கரத்துடன் நரசிம்மர், பிரம்மா மற்றும் ஒயிலாக ஒரு தொடையில் கரம் வைத்து ஒருகாலை முன் வைத்து பிரயோகச் சக்கரத்துடன் காட்சி தரும் துர்க்கை என சோழ சிற்பிகள் பார்த்து பார்த்து அழுகுக்கு அழகு சேர்த்தக் கலை வண்ணம்.


கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவரையும், கூடல் சங்கமேஸ்வரரையும் தரிசிக்க காசி, கயை, காளஹஸ்தி ஆகிய தலங்களை தரிசித்தபலன் கிடைக்கும் என விஜயநகர பேரரசின் கல்வெட்டு இயம்புகிறது.


இத்தலத்தில் வழிபட மஹாதேவர் அருளால் மனவளர்ச்சி குன்றியவர்கள், சித்தபிரமை மற்றும் மனநிலை பாதிப்புக்குள்ளானவர்கள் நல்ல மன அமைதி முன்னேற்றமும் அடைகின்றனர். இறைவன் தவயோகியாய் அமர்ந்திருப்பதால் இங்கு வந்து வழிபடுவோர்க்கு சகல தோஷங்களும் நீங்குகின்றது. மேலும் பித்ரு தோஷம் உடையவர்கள் வழிபடுவதால் முன்னோர் சாபம் நீங்கி அவர்கள் வாழ்விலும் சுப நிகழ்வுகள் பல தடையின்றி நிகழ்வதையும் இங்கு காணலாம்.


பிரார்த்தனை


இங்கு வந்து வேண்டிடும் அடியவர்களின் நியாயமான வேண்டுதல்களான புத்ரபாக்கியம், திருமணம் வாழ்வாதாரம் அனைத்தும் இறையருளால் நிறைவேறுகின்றது.


நேர்த்திக்கடன்:

இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் அபிஷேக பிரியர் ஆதலால் பலவித அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்வித்து தீபமேற்றி வழிபட்டால் மனபாரமின்றி வளமான வாழ்வு வரும். புத்திரபாக்கியம் கிடைத்தவர்கள் துலாபாரம் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.


தல வரலாறு:

கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத்தலைவன் முதலாம் குலோத்துங்க சோழன் தன் பட்டத்தரசி ஏமுலக முடையாளுடன் திருவூறல் திருத்தலத்திற்க்கு வழிபாடு செய்ய வந்தான். அப்போது மோக்ஷத் வீபத்தில் உறையும் கைலாச ஈஸ்வர முடைய மஹா தேவரை பற்றி அறிந்து. அங்கு வந்து நதிகளின் சங்கமாஸ்தானத்தில் பஞ்சாக்ஷரகிரியில் அமைந்த கூடல் சங்கமேஷ்வரரையும் கைலாசன் ஈஸ்வரத்தில் அமைந்த மஹா தேவரையும் தரிசித்தான்.


தவ வடிவில் வீற்றிருந்த இறைவனின் நிலைகண்டு ஏழுலகமுடையாள் கண்களில் நீர் சொரிய ஆதங்கம் தன் கணவரான மாமன்னரை நோக்கினாள். இத்தகைய சிறப்புமிக்க இறைவனுக்கு தாங்கள் ஏன் ஒரு கற்றளி எடுக்கக் கூடாது என வினவினாள். அவள் வேண்டுதலுக்கு இசைந்தான் குலோத்துங்க ராசன் விரைவில் எழும்பியது கற்றளி, முழுவதும் கருங்கல்லால் ஆன கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அமர்ந்தார் கைலாய ஈஸ்வரமுடைய மஹாதேவர்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

சிவரத்ன பூதத்தினால் தவமிருந்து அனுதினமும் பூஜிக்கப்படும் தலமாகும். சோழ சக்ரவர்த்தியான முதலாம் குலோத்துங்க சோழன் தரிசித்து மனபாரம் நீங்கிய தலம்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *