புங்கனூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோயில்

மூலவர்:


ஆத்மலிங்கேஸ்வரர்


அம்மன்/தாயார்:

உமாமகேஸ்வரி


ஊர்:

புங்கனூர்


மாவட்டம்:

வேலூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்


தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.


திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் புங்கனூர், வேலூர்.


போன்:

+91 44 2498 6517, 97898 34952


பொது தகவல்:

பாண்டிய நாட்டின் அமைச்சரான மாணிக்கவாசகர் குதிரை வாங்க சென்றபோது, குருந்த மரத்தடியில் குருநாதராக வந்த சிவன் ஆட்கொண்டு அருள்புரிந்தார். தன்னிடம் இருந்த பொருளைக் கொண்டு ஆவுடையார்கோயிலில்(திருப்பெருந்துறை) ஆத்மநாதசுவாமி என்ற பெயரில் சிவனுக்கு கோயில் கட்டி வழிபட்டார். புங்கனூரிலுள்ள இறைவனும் ஆத்மலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். அதனால், இங்கு வழிபட்டவர்க்கு ஆவுடையார்கோயிலுக்குச் சென்ற புண்ணியம் உண்டாகும்.


பிரார்த்தனை


கஷ்டங்கள் நீங்கி, சகல ஐஸ்வர்யமும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


தலபெருமை:

புங்கனூர் சிவன், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். தெய்வீக சக்தி தானாக வெளிப்படும் இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக இறைவன் எழுந்தருள்வதாக ஐதீகம். இவர் ஆத்மஞானத்தை வழங்குபவராக இறைவன் திகழ்கிறார். அம்பிகையின் திருநாமம் உமாமகேஸ்வரி. உலக வாழ்வுக்கு இகபர சவுபாக்கியத்தை தந்தருள்கிறார். சிவனுக்குரிய பிரதோஷ வேளையில் இங்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைகள் நீங்கி குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.


தல வரலாறு:

800 ஆண்டுகளுக்கும் பழமையான இந்தக் கோவிலில், உமாமகேஸ்வரி சமேத ஆத்மலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். காஞ்சிப்பெரியவர் 70 ஆண்டுகளுக்கு முன் புங்கனூர் வந்தபோது பக்தர்களிடம், இந்த ஊரில் புராதன சிவன் கோயில் இருக்கிறது. அதை உடனே தரிசிக்க வேண்டும், என்று சொல்ல அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் தேட முற்பட்டபோது, சிதிலமடைந்த நிலையிலிருந்த ஆத்மலிங்கேஸ்வரர் கோயிலைக் கண்டனர். கோயிலுக்கு வந்த காஞ்சிப்பெரியவர், சிவனை வழிபட்டதோடு,இன்னும் பல சிவலிங்கங்கள் இப்பகுதியில் இருக்கலாம், என்றும் கூறினார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published.