குன்னூர் கொழுந்தீஸ்வரர் கோயில்

மூலவர்:


கொழுந்தீஸ்வரர்


அம்மன்/தாயார்:

மரகதவள்ளி


தல விருட்சம்:

இலுப்பை


தீர்த்தம்:

அர்ச்சுனன் சுனை தீர்த்தம், திருவோட்டுக்கேணி தீர்த்தம்


ஊர்:

குன்னூர்


மாவட்டம்:

விருதுநகர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகங்கள் நடக்கின்றன.


தல சிறப்பு:

முதல் குடைவரைக்கோயில் என்பது சிறப்பு


திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், குன்னூர், விருதுநகர்.626138


போன்:

+91 98432 77377


பொது தகவல்:

குமரகுருசாமியின் ஜீவ சமாதி:

பாறையை குடைந்து கருவறையில் லிங்கத்துடன் குடவறை கோயில் அமைத்துள்ளனர். பக்கவாட்டின் வலதுபுறம் நடராஜர் – சிவகாமி அம்பாள், இடப்புறம் விநாயகர், முருகன் சிலைகள் பாறையில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. குடவறை கோயில் வெளியில் வலப்பக்கம் சிவகாமி அம்பாள், காலபைரவர், நவக்கிரகங்களுக்கு தனித்தனி கோயில்கள் உள்ளன. கோயில் அருகே குமரகுருபர சுவாமிகளின் ஜீவசமாதியான இடத்தில் சிவன் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. காலபைரவர் கோயில் அருகே குடவறை கோயில் உருவானது குறித்து தமிழில் உள்ள கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் கோயிலை வடிவமைத்த பின்னணியை தொல்லியல் துறையினரால் காண இயலவில்லை. இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது.


பிரார்த்தனை


நோய்கள் தீர மரகதவள்ளி அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரரை வழிபடுகின்றனர் பக்தர்கள்.


நேர்த்திக்கடன்:

மூலவருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.


தலபெருமை:

அர்ச்சுனன் சுனை தீர்த்தம்:

மகாபாரதப் போரில் அர்ச்சுனன் எய்த அம்புகளில் ஒன்று, கோயில் அமைந்துள்ள பாறையில் விழுந்ததாக ஐதீகம். இதன் காரணமாக அம்பு குத்திய இடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பின் அதுவே வற்றாத சுனை நீரூற்றாக அர்ச்சுனன் சுனை தீர்த்தமாக உள்ளது. இத்தீர்த்தம் அடிவாரத்தில் அர்ச்சுனன் நதியாக இன்றளவும் ஓடுகிறது. அர்ச்சுனன் சுனை அருகே திருவோட்டுக்கேணி வற்றாத நீரூற்று உள்ளது. அர்ச்சுனன் சுனை தீர்த்தம், திருவோட்டுக்கேணி தீர்த்தம், நோய்களை தீர்க்கும் அருமருந்தாக இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.


தல வரலாறு:

விருதுநகர் மாவட்டத்தின் எண்ணற்ற கோயில்கள் இருப்பினும், கி.பி., எட்டாம் நூற்றாண்டில் பாறைகளை குடைந்து அமைக்கப்பட்ட முதல் குடவறை சிவன் கோயில் இங்கு அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது. விருதுநகர் மாவட்டம் மூவரை வென்றான் அருகே குன்னூர் மலைப்பாறையில் அமைந்துள்ள மரகதவள்ளி அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் சிவ தலங்களில் பிரசித்தி பெற்றது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

முதல் குடைவரைக்கோயில் என்பது சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *