கோல்வார்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

மூலவர்:


சுந்தரேஸ்வரர்


அம்மன்/தாயார்:

மீனாட்சி


ஊர்:

கோல்வார்பட்டி


மாவட்டம்:

விருதுநகர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

சித்திரை திருவிழா, ஐப்பசி அன்னாபிஷேகம், சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்.


தல சிறப்பு:

சுவாமிக்கு எதிரில் இருக்க வேண்டிய நந்தி சற்று விலகி இருக்கிறது. முருகனின் மயில் வாகனம், பைரவரின் நாய் வாகனம் ஆகியவற்றின் தலைப்பகுதி சுவாமிக்கு வலது பக்கம் இருப்பது வழக்கம், ஆனால், இங்கு இடப்பக்கமாக திரும்பியுள்ளது இத்தலத்தின் சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கோல்வார்பட்டி, சாத்தூர் தாலுகா விருதுநகர் மாவட்டம்.


போன்:

+91 94429 98277


பொது தகவல்:

இங்கு விநாயகர், முருகன், பைரவர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, கருப்பண்ணசாமி, கலங்காத கண்டப்ப நாயக்கர், துவாரபாலகர், தூணில் ராமர், அனுமர் சிற்பம் போன்றவை உள்ளன.


பிரார்த்தனை


இங்குள்ள மீனாட்சி அம்மனை 11 வாரங்கள் வணங்கி, கடைசி வாரம் ஹோமம் செய்தால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும். பவுர்ணமியன்று திருவிளக்கு பூஜை நடத்துதல், பிரதோஷ காலத்தில் நெய்விளக்கு ஏற்றுவதால். புத்திசாலித்தனமும், தைரியமும் உள்ள குழந்தைகள் பிறப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. நாகதோஷம் விலகவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

சங்கடஹரசதுர்த்தி நாட்களில் இங்குள்ள விநாயகருக்கு அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்தால் நாகதோஷம் விலகுவதாக நம்பிக்கையுள்ளது.


தலபெருமை:

கலைநுணுக்கம் மிக்க சிலைகள் இங்கு காணப்படுகிறது, குறிப்பாக ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராமர், சீதை மற்றும் அனுமன் சிலை அற்புதமாக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். கையில் கிளி இல்லாமல் தாமரை மலருடன் அருள்பாலிக்கும் இவளை 11 வாரங்கள் வணங்கி, கடைசி வாரம் ஹோமம் செய்தால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும். பவுர்ணமியன்று திருவிளக்கு பூஜை நடத்துதல், பிரதோஷ காலத்தில் நெய்விளக்கு ஏற்றுவதால். புத்திசாலித்தனமும், தைரியமும் உள்ள குழந்தைகள் பிறப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சிறப்பம்சம்:

ராகு, கேதுவுடன் அருள்பாலிக்கும் விநாயகர் நாகதோஷத்தை விலக்கும் சக்தி படைத்தவராக அருள்பாலிக்கிறார். சங்கடஹர சதுர்த்தி நாட்களில் இவருக்கு அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்தால் நாகதோஷம் விலகுவதாக நம்பிக்கையுள்ளது.


தல வரலாறு:

எட்டையபுரத்தில் சில நூறு ஆண்டுகளுக்கு முன் கலங்காத கண்டப்ப நாயக்கர் ஆட்சி செய்து வந்தார். சில தோஷங்கள் காரணமாக, அவர், அப்போது நடந்த போர்களில் வெற்றி இழந்தார். தோஷ நிவர்த்திக்காக பல்வேறு கோயில்களுக்குச் சென்றார். ஒருசமயம், சுவாமியின் வலப்புறம் ஆற்றலுடன் அருள்பாலிக்கும் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதுடன், வலப்புறம் அம்பாளுடன் கூடிய சிவன் கோயிலும் கட்டினால் தோஷம் நீங்கும், என்று அசரீரி எழுந்தது. அதன்படி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அம்பாள், சுவாமியைத் தரிசித்தார். ஜமீன் எல்கைக்கு உட்பட்ட சாத்தூர் அருகிலுள்ள கோல்வார்பட்டியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அமைப்பில், மீனாட்சி சொக்கநாதர் கோயில் கட்டினார். நூறு கால் மண்டபம் ஒன்றையும் அமைத்தார். இவ்வூரைச் சுற்றியுள்ள 18 பட்டிக்கும் குலதெய்வமாக மீனாட்சி விளங்குகிறாள். வீரபாண்டிய கட்டபொம்மன் இந்தக் கோயிலை பராமரித்து வந்துள்ளார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

சுவாமிக்கு எதிரில் இருக்க வேண்டிய நந்தி சற்று விலகி இருக்கிறது. முருகனின் மயில் வாகனம், பைரவரின் நாய் வாகனம் ஆகியவற்றின் தலைப்பகுதி சுவாமிக்கு வலது பக்கம் இருப்பது வழக்கம், ஆனால், இங்கு இடப்பக்கமாக திரும்பியுள்ளது இத்தலத்தின் சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.