மூளிப்பட்டி தவசிலிங்கம் கோயில்

மூலவர்:


தவசிலிங்கம்


உற்சவர்:

தவசிலிங்கம்


ஊர்:

மூளிப்பட்டி


மாவட்டம்:

விருதுநகர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி, தேய்பிறை அஷ்


தல சிறப்பு:

லிங்கம் பின்பு அய்யனார் வீற்றிருப்பது எக்கோயிலிலும் இல்லாத சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 7:

00 மணி– – 12:00 மணி மாலை 4:00 மணி –இரவு- 8:00 மணி

முகவரி:

அருள்மிகு தவசிலிங்க சுவாமி கோயில் மூளிப்பட்டி, விருதுநகர்


போன்:

+91 99949 52322 ,82481 38143


பொது தகவல்:

லிங்கம் பின்பு அய்யனார் வீற்றிருப்பது எக்கோயிலிலும் இல்லாத சிறப்பு.இதோடு இக்கோயில் வளாகத்தில் பைரவரில் துவங்கி வேட்டை கருப்பசாமி ,சப்தகன்னிமார்கள் ,கண்திருஷ்டி விநாயகர் ,தட்சணாமூர்த்தி , துர்க்கை ,வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி என 32 சன்னதிகளும் உள்ளன. தலையிலிருந்து கங்கை நீர் விழுவது போன்று 12 அடி உயரத்தில் சிவபெருமான் சிலையும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.


பிரார்த்தனை


இங்கு வந்தாலே மனதிலுள்ள கஷ்டங்கள் பஞ்சாக பறந்து விடுகிறது. கேட்ட வரத்தை கொடுப்பதிலும் தவசிலிங்கம் சக்தி உள்ளவராக உள்ளார்.


நேர்த்திக்கடன்:

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம், அர்ச்சனை செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

மன்னர்கள், ஜமீன்தார்கள் வழிப்பட்ட பழமை வாய்ந்த இக்கோயில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குலகோயிலாகும் .இவரது சொந்த நிதியில் கோயில் புனரமைக்கப்பட்டு மூன்றாவது முறையாக 2020 ஆகஸ்ட் 28ல் கும்பாபிஷேகமும் நடந்து முடிந்துள்ளது. மூலவர் சன்னதியானது மன்னர்காலத்தை போன்று கல்கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


தல வரலாறு:

இங்குள்ள தவசிலிங்கம் கோயில் பகுதி 500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் ஆண்ட காலத்தில் புதராக இருந்துள்ளது.இங்கு மேய்ச்சலுக்கு வந்த பசு மாடு ஒன்று பால் தராமல் இருக்க இதை கண்காணிக்க மன்னர் உத்தரவிட்டுள்ளார். புதருக்குள் மாடு சென்று வருவதை அறிந்த வேலையாட்கள் மன்னரிடம் கூறி உள்ளனர். புதரை தோண்டும் போது மண்வெட்டியால் வெட்டியதில் ரத்தம் பீரிட லிங்கம் தென்பட்டது. உடனே அங்கு மண்கோட்டையால் கோயில் எழுப்பி உள்ளனர்.


சிறப்பம்சம்:

விஞ்ஞானம் அடிப்படையில்:

லிங்கம் பின்பு அய்யனார் வீற்றிருப்பது எக்கோயிலிலும் இல்லாத சிறப்பு.இதோடு இக்கோயில் வளாகத்தில் பைரவரில் துவங்கி வேட்டை கருப்பசாமி , சப்தகன்னிமார்கள் ,கண்திருஷ்டி விநாயகர் ,தட்சணாமூர்த்தி , துர்க்கை ,வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி என 32 சன்னதிகளும் உள்ளன.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *