ஆசாரக்கோவை | Acarakkovai

ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இஃது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதியவர்.


பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்:

1 ஆசார வித்து
2 ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
3 தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
4 முந்தையோர் கண்ட நெறி
5 எச்சிலுடன் தீண்டத் தகாதவை
6 எச்சிலுடன் காணக் கூடாதவை
7 எச்சில்கள்
8 எச்சிலுடன் செய்யக் கூடாதவை
9 காலையில் கடவுளை வணங்குக
10 நீராட வேண்டிய சமயங்கள்
11 பழைமையோர் கண்ட முறைமை
12 செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
13 செய்யத் தகாதவை
14 நீராடும் முறை
15 உடலைப்போல் போற்றத் தக்கவை
16 யாவரும் கூறிய நெறி
17 நல்லறிவாளர் செயல்
18 உணவு உண்ணும் முறைமை
19 கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
20 உண்ணும் விதம்
21 ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
22 பிற திசையும் நல்ல
23 உண்ணக்கூடாத முறைகள்
24 பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
25 கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை
26 உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
27 உண்டபின் செய்ய வேண்டியவை
28 நீர் குடிக்கும் முறை
29 மாலையில் செய்யக் கூடியவை
30 உறங்கும் முறை
31 இடையில் செல்லாமை முதலியன
32 மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
33 மலம் சிறுநீர் கழிக்கும் முறை
34 மலம், சிறுநீர் கழிக்கும் திசை
35 வாய் அலம்பாத இடங்கள்
36 ஒழுக்க மற்றவை
37 நரகத்துக்குச் செலுத்துவன
38 எண்ணக்கூடாதவை
39 தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க
40 சான்றோர் இயல்பு
41 சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
42 மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
43 உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
44 நாழி முதலியவற்றை வைக்கும் முறை
45 பந்தலில் வைக்கத் தகாதவை
46 வீட்டைப் பேணும் முறைமை
47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
48 அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
49 நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
50 கேள்வியுடையவர் செயல்
51 தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை
52 தளராத உள்ளத்தவர் செயல்
53 ஒழுக்கமுடையவர் செய்யாதவை
54 விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
55 அறிஞர் விரும்பாத இடங்கள்
56 தவிர்வன சில
57 நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
58 ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை
59 சில தீய ஒழுக்கங்கள்
60 சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை
61 நூல்முறை உணர்ந்தவர் துணிவு
62 சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
63 கற்றவர் கண்ட நெறி
64 வாழக்கடவர் எனப்படுவர்
65 தனித்திருக்கக் கூடாதவர்
66 மன்னருடன் பழகும் முறை
67 குற்றம் ஆவன
68 நல்ல நெறி
69 மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
70 மன்னன் முன் செய்யத் தகாதவை
71 மன்னன் முன் சொல்லக் கூடாதவை
72 வணங்கக்கூடாத இடங்கள்
73 மன்னர் முன் செய்யத் தகாதவை
74 ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
75 சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
76 சொல்லும் முறைமை
77 நல்ல குலப்பெண்டிர் இயல்பு
78 மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
79 பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
80 சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
81 ஆன்றோர் செய்யாதவை
82 மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
83 கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
84 பழகியவை என இகழத் தகாதவை
85 செல்வம் கெடும் வழி
86 பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது
87 கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
88 பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
89 கிடைக்காதவற்றை விரும்பாமை
90 தலையில் சூடிய மோத்தல்
91 பழியாவன
92 அந்தணரின் சொல்லைக் கேட்க
93 சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
94 ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
95 பொன்னைப் போல் காக்கத் தக்கவை
96 எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
97 சான்றோர் முன் சொல்லும் முறை
98 புகக் கூடாத இடங்கள்
99 அறிவினர் செய்யாதவை
100 ஒழுக்கத்தினின்று விலகியவர்

ஆசாரக்கோவை விக்கிபுத்தகம்


இந்நூலில் உள்ள அனைத்துப் பாடல்களையும் ஆசாரக்கோவை விக்கிப்புத்தகத்தில் காணலாம்.


வெளி இணைப்புகள்

ஆசாரக்கோவை – விக்கிப்பீடியா

Ācārakkōvai – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *